உங்கள் பாதுகாப்பு

நாங்கள் மேற்கொள்ளும் எல்லா செயல்களிலும் உங்கள் பாதுகாப்பே முதலாவதாக இருக்கும்.

உங்கள் தரவு பாதுகாப்பாக இல்லையெனில், அது தனிப்பட்டதாக இருக்காது. எனவேதான் உலகின் சிறந்த மேம்பட்ட பாதுகாப்பு கட்டமைப்புகள் மூலம் தேடல், வரைபடம் மற்றும் YouTube போன்ற Google சேவைகள் பாதுகாக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்தக்கொள்கிறோம்.

உங்கள் தரவு பரிமாறப்படும் போது, அதைத் தனிப்பட்டதாக வைத்திருக்க முறைமையாக்கம் உதவுகிறது

எங்கள் சேவைகளில் முறைமையாக்கம் அதிக பாதுகாப்பையும் தனியுரிமையையும் அளிக்கிறது. நீங்கள் மின்னஞ்சல் அனுப்புவது, வீடியோவைப் பகிர்வது, இணையதளத்திற்குச் செல்வது அல்லது படங்களைச் சேமிப்பது போன்ற செயல்களை மேற்கொள்ளும் போது, நீங்கள் உருவாக்கும் தரவானது உங்கள் சாதனம், Google சேவைகள் மற்றும் எங்களின் தரவு மையங்களுக்கு இடையே நகர்த்தப்படும். HTTPS மற்றும் டிரான்ஸ்போர்ட் லேயர் பாதுகாப்பு போன்ற முதன்மை முறைமையாக்கத் தொழில்நுட்பம் உட்பட பல அடுக்குப் பாதுகாப்புடன் இந்தத் தரவைப் பாதுகாக்கிறோம்.

எங்கள் மேகக்கணி கட்டமைப்பு உங்கள் தரவை 24/7 முறையில் பாதுகாக்கும்

தனிப்பயனாக்கிய தரவு மையங்கள் முதல், கண்டங்களுக்கு இடையே தரவைப் பரிமாற்றுவதற்காக கடல் அடியில் செல்லும் எங்கள் ஃபைபர் கேபிள்கள் வரை, உலகத்தின் சிறந்த மிகப் பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான மேகக்கணி கட்டமைப்புகளாக Google செயல்படுகிறது. மேலும் உங்கள் தரவைப் பாதுகாப்பதற்கும் உங்களுக்குத் தேவைப்படும் போது கிடைப்பதற்கும் இது தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுகிறது. பல தரவு மையங்களுக்குத் தரவை வழங்கியிருப்பதால், தீவிபத்து அல்லது பேரிடர் காலங்களில் தரவு தானாகவே தடையின்றி நிலையான, பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படும்.

அச்சுறுத்தலைக் கண்டறிதல் அம்சமானது எங்கள் சேவைகளைப் பாதுகாக்க உதவுகிறது

ஸ்பேம், தீப்பொருள், வைரஸ்கள் மற்றும் பிற வடிவிலான தீங்குவிளைவிக்கும் குறியீடு உட்பட அச்சுறுத்தல்களிடமிருந்து எங்கள் சேவைகள் மற்றும் அடித்தளக் கட்டமைப்பைப் பாதுகாக்க, அவற்றை தொடர்ச்சியாகக் கண்காணிப்போம்.

உங்கள் தரவை நேரடியாக அணுகுவதற்கான அணுகலை அரசாங்கத்திற்கு வழங்குவதில்லை

உங்கள் தரவு அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு உங்கள் தரவைச் சேகரிக்கும் எங்கள் சேவையகங்களுக்கு “மறைமுக” அணுகலை வழங்குவதில்லை. எங்கள் பயனரின் தகவலை அரசாங்க நிறுவனம், U.S. அல்லது பிற நிறுவனங்கள் நேரடியாக அணுகுவதில்லை. சில நேரங்களில் சட்ட அமலாக்கத் துறையிடமிருந்து பயனரின் தரவைக் கேட்கும் கோரிக்கைகளைப் பெறுவோம். எங்கள் சட்டக் குழு இந்தக் கோரிக்கைகளை மதிப்பாய்வு செய்து, சட்டப்பூர்வ உரிமையை மீறுகின்ற அல்லது சரியான செயல்முறையைப் பின்பற்றாத கோரிக்கையைத் திருப்பி அனுப்பிவிடும். எங்களின் வெளிப்படைத்தன்மை அறிக்கையில் இந்தத் தரவு கோரிக்கைகளை வெளிப்படையான முறையில் கையாள்வதற்குக் கடினமாக உழைத்துள்ளோம்.

முறைமையாக்கப்பட்ட ஈஃபிள் டவரின் படம்

Gmail முறைமையாக்கம் மின்னஞ்சல்களைத் தனிப்பட்டதாக வைத்திருக்கும்

ஆரம்பநாளிலிருந்து, நீங்கள் அனுப்பும் செய்திகளை தீங்குவிளைவிப்பவர்கள் படிப்பதைக் கடினமாக்கும் முறைமையாக்கப்பட்ட இணைப்புகளை Gmail ஆதரிக்கிறது. முறைமையாக்கப்பட்ட இணைப்பு இன்றி அனுப்பப்பட்ட மின்னஞ்சலை நீங்கள் பெறுவது போன்ற சாத்தியமான ஆபத்துகள் பற்றி Gmail உங்களை எச்சரிக்கும்.

பாதுகாப்பு ஸ்கேனர் எச்சரிக்கை அடையாளத்துடன் கூடிய Gmail மின்னஞ்சல் என்வலப்

Gmail ஸ்பேம் பாதுகாப்பானது சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல்களை வடிகட்டுகிறது

பல தீப்பொருள் மற்றும் ஃபிஷிங் தாக்குதல்கள் மின்னஞ்சலில் இருந்து தொடங்குகின்றன. Gmail பாதுகாப்பு அம்சம், வேறெந்த மின்னஞ்சல் சேவையைக் காட்டிலும் ஸ்பேம், ஃபிஷிங் மற்றும் தீப்பொருள் ஆகியவற்றிலிருந்து சிறப்பாக பாதுகாக்கிறது. பயனர்கள் எந்த வகையான செய்திகளை ஸ்பேம் எனக் குறிக்கின்றனர் என்பதை அடையாளம் கண்டுகொள்வதற்காக, கோடிக்கணக்கான மின்னஞ்சல்களிலிருந்து பெற்ற தன்மைகளைப் Gmail பகுப்பாய்வு செய்கிறது, பின்னர் சந்தேகத்திற்குரிய அல்லது அபாயகரமான மின்னஞ்சல்கள் உங்களை எப்போதும் அடையாதவாறு தடுக்க, இந்த அடையாளங்களைப் பயன்படுத்தும். நீங்கள் பெறும் சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல்களைத் தெரிவிக்க, "ஸ்பேம் எனப் புகாரளி" என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உதவலாம்.

Gmail இன் ஸ்பேம் வடிப்பான் மேலும் துல்லியமாகச் செயல்படுவதற்கு,மெஷின் லேர்னிங் மற்றும் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் உதவுகிறது. இப்போது இது 99.9% ஸ்பேமை உங்கள் இன்பாக்ஸிற்கு வெளியே வைத்திருக்கும்.

பாதுகாப்புப் புதுப்பித்தல் செயல்நிலைப் பட்டியுடன் Chrome உலாவி

Chrome தானாகவே உங்கள் உலாவிப் பாதுகாப்பை மேம்படுத்தும்

பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் எப்போதும் மாறக்கூடியவை, எனவே எப்போதும் புதுப்பித்த நிலையில் இருந்தால் மட்டுமே பாதுகாப்பாக இருப்பதாக அர்த்தம். இதனால், நீங்கள் பயன்படுத்தும் உலாவியின் பதிப்பானது பாதுகாப்புத் திருத்தங்கள், தீப்பொருட்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய தளங்களிருந்து பாதுகாத்தல் மற்றும் பல அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த Chrome வழக்கமாகச் சரிபார்க்கும். Chrome தானாகவே புதுப்பித்துக்கொள்ளும், இதனால் உங்களிடம் எப்போதுமே சமீபத்திய Chrome பாதுகாப்பு தொழில்நுட்பம் இருக்கும்.

சாதனத்தில் நுழைய முயற்சிக்கும் தீங்கிழைக்கும் பயன்பாடு

தீங்கிழைக்கும் பயன்பாடுகளிலிருந்து Google Play உங்கள் ஃபோனைப் பாதுகாக்கும்

உங்கள் சாதனத்தின் ஒரு பெரிய பாதுகாப்புப் பாதிப்பானது நீங்கள் நிறுவும் பயன்பாடுகளால் ஏற்படலாம். Play ஸ்டோருக்குச் சென்றடைவதற்கு முன்பே, தீங்கிழைக்கும் பயன்பாடுகளை எங்களின் கண்டறியும் முறைமை கண்டறிகிறது. பயன்பாடு பாதுகாப்பானதா இல்லையா என்று நிச்சயமாகத் தெரியாதபட்சத்தில், Android பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர்களால் அது கைமுறையாக மதிப்பாய்வு செய்யப்படுகிறது. எங்களின் கண்டறியும் முறைமையை மேம்படுத்தும்போது, Google Play இல் ஏற்கனவேயுள்ள பயன்பாடுகளை மறுமதிப்பீடு செய்து, தீங்கிழைக்கும் பயன்பாடுகளை அகற்றுவோம், இதனால் அவை உங்கள் சாதனத்திற்குச் சென்றடைவதில்லை.

தீங்கிழைக்கும் மற்றும் தவறான விளம்பரங்களை Google தடுக்கும்

தீப்பொருளைக் கொண்ட விளம்பரங்கள், நீங்கள் பார்க்க முயற்சிக்கும் உள்ளடக்கத்தை மறைப்பது, போலியான பொருட்களை விளம்பரப்படுத்துவது போன்றவை உங்கள் ஆன்லைன் அனுபவத்தை பாழாக்குகிறது அல்லது எங்கள் விளம்பரக் கொள்கைகளை மீறுகிறது. இந்தப் பிரச்னையை மிகத் தீவிரமாகக் கவனித்துவருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் எங்களின் நேரடி மதிப்பாய்வாளர்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப மென்பொருள் மூலம் ஏறத்தாழ பில்லியன் கணக்கான தவறான விளம்பரங்களைத் தடுக்கிறோம். தீங்கு விளைவிக்கும் விளம்பரங்களைப் பற்றி புகாரளிப்பதற்கும் நீங்கள் பார்க்க விரும்பும் விளம்பரங்களின் வகைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் உங்களுக்குக் கருவிகளை வழங்குகிறோம். அனைவருக்கும் இணையம் பாதுகாப்பானதாக இருக்க, எங்களின் புள்ளிவிவரங்களையும் சிறந்த நடைமுறைகளையும் வெளியிடுவோம்.

ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பதற்கு உதவக்கூடிய சிறந்த உதவிக்குறிப்புகள்

இந்த விரைவு உதவிக்குறிப்புகளைப் பின்பற்றி உங்கள் ஆன்லைன் கணக்குகளையும் தனிப்பட்ட தரவையும் பாதுகாப்பாக வைத்திருக்கவும்.

  • உங்கள் சாதனங்களைப் பாதுகாத்தல்

  • ஃபிஷிங் முயற்சிகளைத் தவிர்க்கவும்

  • இணையத்தில் பாதுகாப்பாக உலாவவும்

Google பாதுகாப்புக் கவசம் மற்றும் சரிபார்ப்புப் பட்டியல்

வலிமையான கடவுச்சொற்களை உருவாக்கவும்

வலிமையான, பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்குவதே ஆன்லைன் கணக்குகளைப் பாதுகாப்பதற்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய மிக முக்கியமான படியாகும். இதைச் செய்ய நீங்கள் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய தொடர்ச்சியான சொற்களைப் பயன்படுத்தலாம். ஆனால், அது பிறர் யூகிப்பதற்குக் கடினமாக இருக்க வேண்டும். அல்லது நீண்ட வாக்கியத்தில் உள்ள ஒவ்வொரு சொல்லின் முதல் எழுத்துகளைப் பயன்படுத்தி, கடவுச்சொல்லை உருவாக்கலாம். அதில் குறைந்தது 8 எழுத்துக்குறிகள் இருக்குமாறு அமைத்து, இன்னும் வலு சேர்க்கவும். நீளமான கடவுச்சொல்லே, வலிமையான கடவுச்சொல்லாகும்.

பாதுகாப்புக் கேள்விகளுக்குப் பதில்களை உருவாக்கும் போது, போலியான பதில்களைப் பயன்படுத்தி கடவுச்சொல் யூகிப்பை இன்னும் கடினமாக்கவும்.

ஒருபோதும் ஒரே கடவுச்சொல்லை இருமுறை பயன்படுத்த வேண்டாம்

ஒவ்வொரு கணக்கிற்கும் தனிப்பட்ட கடவுச்சொற்களைப் பயன்படுத்தவும்

Google கணக்கு, சமூக மீடியா சுயவிவரங்கள், ரீடெய்ல் இணையதளங்கள் போன்ற பல கணக்குகளில் உள்நுழைவதற்கு ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்தினால், பாதுகாப்பு ஆபத்து அதிகரிக்கும். இது உங்கள் வீடு, கார், அலுவலகம் ஆகியவற்றுக்கு ஒரே சாவியைப் பயன்படுத்துவது போன்றதாகும். யாராவது ஒருவர் ஒரு கணக்கிற்கான அணுகலைப் பெற்றுவிட்டால், எல்லாக் கணக்குகளும் உங்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்படலாம்.

பல கடவுச்சொற்களைக் கண்காணிக்கவும்

Chrome உலாவியில் உள்ள Google Smart Lock போன்ற கடவுச்சொல் நிர்வாகி, உங்கள் வெவ்வேறு ஆன்லைன் கணக்குகளுக்கான எல்லாக் கடவுச்சொற்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் கண்காணிப்பதற்கும் உதவும். இது பாதுகாப்புக் கேள்விகளுக்கான உங்கள் பதில்களைக்கூட கண்காணித்து, உங்களுக்காகவே கடவுச்சொற்களை ரேண்டமாக உருவாக்கும்.

இருபடிச் சரிபார்ப்பைப் பயன்படுத்தி ஹேக்கர்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்கவும்

நீங்கள் கணக்கில் உள்நுழைவதற்குப் பயன்படுத்தும் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லுடன் சேர்த்து இரண்டாம் நிலை காரணியும் அவசியம் என்பதால், உங்கள் கணக்கை அணுகக்கூடாதவரிடமிருந்து கணக்கைப் பாதுகாக்க இருபடிச் சரிபார்ப்பு உதவும். எடுத்துக்காட்டாக, Google இல் இது Google அங்கீகரிப்புப் பயன்பாடு உருவாக்கும் ஆறு இலக்கக் குறியீடாகவோ அல்லது நம்பகமான சாதன உள்நுழைவை ஏற்பதற்கு Google பயன்பாட்டில் காட்டப்படும் அறிவிப்பாகவோ இருக்கும்.

ஃபிஷிங்கிற்கு எதிரான கூடுதல் பாதுகாப்பிற்கு, உங்கள் கணினியின் USB ஃபோர்ட்டில் செருகக்கூடிய அல்லது NFC (குறுவெளி தகவல் பரிமாற்றம்) அல்லது புளூடூத்தைப் பயன்படுத்தி உங்கள் மொபைல் சாதனத்துடன் இணைக்கக்கூடிய பாதுகாப்புச் சாவியைப் பயன்படுத்தவும்.

உங்கள் மென்பொருளைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்கவும்

பாதுகாப்பு தொடர்பான பாதிப்புகளிலிருந்து உங்கள் கணக்கைப் பாதுகாக்க, உங்கள் இணைய உலாவி, ஆப்ரேட்டிங் சிஸ்டம், செருகுநிரல்கள் அல்லது ஆவண எடிட்டர்கள் ஆகிய அனைத்திற்கும் சமீபத்திய பதிப்பிலான மென்பொருளை எப்போதும் பயன்படுத்தவும். உங்கள் மென்பொருளைப் புதுப்பிப்பதற்கான அறிவிப்புகளைப் பெறும் போது, முடிந்தளவுக்கு விரைவில் புதுப்பிக்கவும்.

எப்போதுமே சமீபத்திய பதிப்புகளையே பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிசெய்வதற்கு, நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் மென்பொருளை மதிப்பாய்வு செய்யவும். Chrome உலாவி உள்ளிட்ட சில சேவைகள் தானாகவே புதுப்பிக்கப்படும்.

திரைப் பூட்டைப் பயன்படுத்தவும்

கணினி, லேப்டாப், டேப்லெட் அல்லது ஃபோனை நீங்கள் பயன்படுத்தாத போது, திரையைப் பூட்டவும். இதன் மூலம் உங்கள் சாதனத்தைப் பிறர் பயன்படுத்துவதைத் தடுக்கலாம். கூடுதல் பாதுகாப்பிற்காக, உறக்கநிலைக்குச் செல்லும் போது தானாகவே பூட்டும் வகையில் உங்கள் சாதனத்தை அமைக்கவும்.

உங்கள் ஃபோன் தொலைந்துவிட்டால், உடனே அதைப் பூட்டவும்

உங்கள் ஃபோன் தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ, சில விரைவு படிகளிலேயே உங்கள் தரவைப் பாதுகாக்கும் வகையில் எனது கணக்கு என்பதற்குச் சென்று, “எனது ஃபோனைக் கண்டறி” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்களிடம் Android அல்லது iOS சாதனம் என எது இருந்தாலும், உங்கள் ஃபோனை தொலைநிலையிலிருந்து கண்டறிந்து, பூட்டலாம். இவ்வாறு செய்தால், வேறு எவராலும் உங்கள் ஃபோனைப் பயன்படுத்தி, உங்கள் தனிப்பட்ட தகவலை அணுக முடியாது.

Chrome இல் பாதுகாக்கப்ட்பட கடவுச்சொற்களை உலாவி காட்டும்

உங்கள் ஃபோனில், தீங்கிழைப்பதற்குச் சாத்தியமுள்ள பயன்பாடுகளை முடக்கவும்

நீங்கள் நம்பும் மூலத்திலிருந்தே எப்போதும் மொபைல் பயன்பாடுகளைப் பதிவிறக்கவும். Android சாதனங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு உதவும் வகையில், Google Play ஸ்டோரிலிருந்து பயன்பாடுகளைப் பதிவிறக்குவதற்கு முன் அவற்றில் பாதுகாப்புச் சரிபார்ப்பை Google Play Protect இயக்கும், மேலும் பிற மூலங்களின் தீங்கிழைக்கக்கூடிய சாத்தியமான பயன்பாடுகள் உங்கள் சாதனத்தில் உள்ளனவா என்பதை அடிக்கடிச் சரிபார்க்கும்.

உங்கள் தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்க, நீங்கள் செய்ய வேண்டியவை:

  • உங்கள் பயன்பாடுகளை மதிப்பாய்வு செய்து, நீங்கள் பயன்படுத்தாதவற்றை நீக்கவும்
  • ஆப்ஸ்டோர் அமைப்புகளுக்குச் சென்று, தானியங்குப் புதுப்பிப்புகளை இயக்கவும்
  • உங்கள் இருப்பிடம், படங்கள் போன்ற முக்கியமான தரவிற்கான அணுகலை நீங்கள் நம்பும் பயன்பாடுகளுக்கு மட்டும் வழங்கவும்

மின்னஞ்சல் ஸ்கேம்கள், போலியான பரிசுகள் மற்றும் கிஃப்ட்கள் குறித்து கவனமாக இருக்கவும்

அந்நியர்களிடமிருந்து பெறும் செய்திகள் (எதையேனும் வென்றுவிட்டீர்கள் என்பதைத் தெரிவிப்பது, கருத்துக்கணிப்பை முடித்ததற்காகப் பரிசுகளை வழங்குவது அல்லது பணம் ஈட்டுவதற்கான விரைவான வழிகளை விளம்பரப்படுத்துவது போன்றவை), குறிப்பாக உண்மை என நம்பும் வகையில் இருந்தால், அவை எப்போதும் சந்தேகத்திற்குரியவையாக இருக்கும். சந்தேகத்திற்குரிய இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம். சந்தேகத்திற்குரிய படிவங்கள் மற்றும் கருத்துக்கணிப்புகளில் தனிப்பட்ட தகவலை ஒருபோதும் உள்ளிட வேண்டாம்.

தனிப்பட்ட தகவலுக்கான கோரிக்கைகள் குறித்து கவனமாக இருக்கவும்

கடவுச்சொற்கள், வங்கிக் கணக்கு மற்றும் கிரெடிட் கார்டு எண்கள் அல்லது உங்கள் பிறந்தநாள் போன்ற தனிப்பட்ட தகவலைக் கேட்கும் சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல்கள், உடனடிச் செய்திகள் அல்லது பாப் அப் சாளரங்களுக்குப் பதிலளிக்க வேண்டாம். உங்கள் வங்கி போன்று நீங்கள் நம்பும் தளத்திலிருந்து செய்தியைப் பெற்றாலும்கூட, ஒருபோதும் இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டாம் அல்லது பதில் செய்தியை அனுப்ப வேண்டாம். நேரடியாக அவர்களது இணையதளம் அல்லது பயன்பாட்டிற்குச் சென்று, உங்கள் கணக்கில் உள்நுழைவதே சிறந்ததாகும்.

சட்டப்பூர்வமான தளங்களும் சேவைகளும், கடவுச்சொற்கள் அல்லது நிதி சார்ந்த தகவலை மின்னஞ்சலில் அனுப்பும்படி கேட்டு செய்திகளை அனுப்பாது.

ஆள்மாறாட்டம் செய்பவர்களைக் குறித்து கவனமாக இருக்கவும்

உங்களுக்குத் தெரிந்த ஒருவர் அனுப்பிய மின்னஞ்சல் செய்தி வழக்கத்திற்கு மாறாக இருந்தால், அவரது கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கக்கூடும்.

பின்வருபவற்றைப் பார்க்கவும்:

  • பணத்திற்கான அவசரக் கோரிக்கைகள்
  • வேறு நாட்டில் மாட்டிக்கொண்டதாகத் தெரிவிப்பவர்
  • தனது ஃபோன் தொலைந்ததாகக் கூறுவார், ஆனால் அவரை அழைக்க முடியாது

மின்னஞ்சல் சட்டப்பூர்வமானது என்பதை உறுதிப்படுத்தும் வரை, செய்திக்குப் பதிலளிக்க வேண்டாம் அல்லது எந்த இணைப்புகளையும் கிளிக் செய்ய வேண்டாம்.

கோப்புகளைப் பதிவிறக்குவதற்கு முன் நன்கு சரிபார்க்கவும்

பாதிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் PDF இணைப்புகள் மூலம் சில அதிநவீன ஃபிஷிங் தாக்குதல்கள் ஏற்படலாம். சந்தேகத்திற்குரிய இணைப்பைக் கண்டறிந்தால், Chrome அல்லது Google இயக்ககத்தைப் பயன்படுத்தி அதைப் பாதுகாப்பாக திறக்கவும். இதன் மூலம் உங்கள் சாதனத்தில் பாதிப்பு ஏற்படும் ஆபத்தைக் குறைக்கலாம். வைரஸ் இருந்தால், உங்களுக்கு எச்சரிக்கை காட்டப்படும்.

பாதுகாப்பான நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தவும்

கடவுச்சொல் தேவைப்படும் பொது அல்லது இலவச வைஃபையைப் பயன்படுத்தினால்கூட, கவனமாக இருக்கவும். பொது நெட்வொர்க்குடன் இணைக்கும் போது, அருகிலுள்ள எவரும் உங்கள் இணையச் செயல்பாட்டைக் (நீங்கள் பார்க்கும் இணையதளங்கள் மற்றும் தளங்களில் நீங்கள் உள்ளிடும் தகவல் போன்றவை) கண்காணிக்கக்கூடும். பொது அல்லது இலவச வைஃபையை நீங்கள் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தால், தளம் பாதுகாப்பானதா என்பதை Chrome உலாவியின் முகவரிப் பட்டியில் தெரிந்துகொள்ளவும்.

முக்கியத் தகவலை உள்ளிடும் முன்பு, பாதுகாப்பான இணைப்புகளில் உள்ளீர்களா என்பதைச் சரிபார்க்கவும்

நீங்கள் இணையத்தில் உலாவும் போது, குறிப்பாக கடவுச்சொல் அல்லது கிரெடிட் கார்டு விவரங்கள் போன்ற முக்கியமான தகவலை உள்ளிட வேண்டுமெனில், நீங்கள் பார்க்கும் தளங்களுடனான இணைப்பு பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். பாதுகாப்பான URL, HTTPS எனத் தொடங்கும். Chrome உலாவியின் URL புலத்தில், பச்சைநிற பூட்டு ஐகான் காட்டப்படும். அத்துடன் அதற்கு அருகில் “பாதுகாப்பானது” எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். தளம் பாதுகாப்பானதாக இல்லையெனில், “பாதுகாப்பற்றது” எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். HTTPS ஆனது உங்கள் உலாவி அல்லது பயன்பாட்டை நீங்கள் பார்க்கும் தளங்களுடன் பாதுகாப்பாக இணைத்து, நீங்கள் பாதுகாப்பாக உலாவுவதற்கு உதவும்.