உங்கள் தரவு

எந்த வகையான தரவைச் சேகரித்துப் பயன்படுத்துகிறோம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.

Google சேவைகளைப் பயன்படுத்தும் போது, எங்கள் மீது நம்பிக்கை வைத்து உங்கள் தரவை வழங்குகிறீர்கள். சிறப்பான சேவைகளை உங்களுக்கு வழங்க, எந்த வகையான தகவலைச் சேகரிக்கிறோம் என்பதையும் அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதையும் தெளிவாக எடுத்துக்கூறுவது எங்கள் பொறுப்பாகும்.

நாங்கள் சேகரிக்கும் மூன்று முக்கியமான தரவு வகைகள் பின்வருமாறு:

உங்கள் செயல்கள்

எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் போது (எடுத்துக்காட்டாக, Google இல் தேடுதல், Google வரைபடத்தில் வழிகளைப் பெறுதல் அல்லது YouTube இல் வீடியோவைப் பார்த்தல்), அவற்றின் மூலம் சிறப்பான அனுபவத்தை நீங்கள் பெறுவதற்குத் தரவைச் சேகரிக்கிறோம். அதில் பின்வரும் தகவல்கள் இருக்கலாம்:

 • நீங்கள் தேடுபவை
 • பார்வையிடும் இணையதளங்கள்
 • பார்க்கும் வீடியோக்கள்
 • கிளிக் செய்யும் அல்லது தட்டும் விளம்பரங்கள்
 • உங்கள் இருப்பிடம்
 • சாதனத் தகவல்கள்
 • IP முகவரி மற்றும் குக்கீத் தரவு

நீங்கள் உருவாக்கும் விஷயங்கள்

Google கணக்கு மூலம் உள்நுழைந்திருந்தால், எங்கள் சேவைகளைப் பயன்படுத்தி உருவாக்குபவற்றைச் சேமித்துப் பாதுகாப்போம். அதில் பின்வரும் தகவல்கள் இருக்கலாம்:

 • Gmail மூலம் அனுப்பிய மற்றும் பெற்ற மின்னஞ்சல்கள்
 • உங்கள் தொடர்புகள்
 • கேலெண்டர் நிகழ்வுகள்
 • பதிவேற்றிய படங்கள் மற்றும் வீடியோக்கள்
 • இயக்ககத்தில் உள்ள ஆவணம், விரிதாள் மற்றும் ஸ்லைடு

உங்கள் தனித்துவமான அம்சங்கள்

Google கணக்கில் பதிவுபெறும் போது, நீங்கள் வழங்கும் அடிப்படைத் தகவல்களையும் சேகரிப்போம். அதில் பின்வரும் தகவல்கள் இருக்கலாம்:

 • பெயர்
 • மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்
 • பிறந்தநாள்
 • பாலினம்
 • ஃபோன் எண்
 • நாடு
ஸ்மார்ட்ஃபோனில் Google வரைபடம்

Google வரைபடம் தேடும் இடங்களை விரைவாகக் கண்டறிந்து வழங்கும் விதம்

Google வரைபடப் பயன்பாட்டைப் பயன்படுத்தும் போது, உங்கள் இருப்பிடத்தைப் பற்றிய தரவை உங்கள் மொபைல் அநாமதேய பிட்களாக Googleக்கு அனுப்பும். ட்ராஃபிக் நிலவரங்களை அறிந்துகொள்ள, இந்தத் தரவு உங்கள் இருப்பிடத்தைச் சுற்றியுள்ளவர்களின் தரவுடன் இணைத்துப் பயன்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக, ஒரே தெருவில் அதிகமான வாகனங்கள் மெதுவாக நகர்வதைக் கண்டறிந்து, அங்கு அதிக ட்ராஃபிக் இருப்பதை வரைபடம் உங்களுக்குத் தெரியப்படுத்தும். எனவே, அடுத்த முறை விபத்து தொடர்பான எச்சரிக்கையை வழங்கி, விரைவான வழியில் செல்வதற்கு வரைபடம் வழிகாட்டும் போது, குறுக்குவழியைப் பெறுவதற்குக் காரணமாக உள்ள அந்த வழியில் பயணிப்பவர்களுக்கு உங்கள் நன்றியைத் தெரிவிக்கவும்.

தானே நிரப்பும் வசதி கொண்ட Google தேடல் பட்டி

Google உங்கள் தேடல்களைத் தானாக நிரப்பும் விதம்

ஏதேனும் தேடும் போது, அதில் எழுத்துப்பிழை இருப்பினும் Google அதன் அர்த்தத்தை எப்படியோ தெரிந்துகொள்கிறது, தெரியுமா? எங்கள் எழுத்துப் பிழை திருத்தி அமைப்பானது, முன்பு அதே பிழையைச் செய்துள்ளவர்களின் தரவைப் பயன்படுத்தி உங்களுக்காக அதைச் சரிசெய்கிறது. அதாவது நீங்கள் “தமில்” என உள்ளிட்டாலும், நாங்கள் “தமிழ்” எனத் தேடித் தருகின்றோம்.

Google உங்கள் தேடல்களைத் தானே நிரப்ப, உங்கள் தேடல் வரலாறும் உதவலாம். எடுத்துக்காட்டாக, “பார்சிலோனா விமானங்கள்" என்பதை முன்பே தேடியிருந்தால், தட்டச்சு முடிவதற்கு முன்பே தேடல் பெட்டியில் அதைப் பரிந்துரைப்போம். அல்லது நீங்கள் ஒரு கால்பந்து அணியின் ரசிகராக இருந்து மற்றும் அடிக்கடி "பார்சிலோனா கோல்கள்" எனத் தேடுகிறீர்கள் எனில், அதை உடனே பரிந்துரைப்போம்.

தன்னிரப்பி மூலம் படிவத்தைப் பூர்த்திசெய்யும் Chrome தாவல்

உங்களுக்காகப் படிவங்களை Chrome பூர்த்திசெய்யும் விதம்

ஆன்லைனில் நீங்கள் ஏதாவது வாங்கும் அல்லது கணக்கில் பதிவுபெறும் ஒவ்வொரு முறையும், தனிப்பட்ட தகவல்களைப் பூர்த்திசெய்வதில் நேரம் செலவழிக்கிறீர்கள். Chromeஐப் பயன்படுத்தும் போது, உங்கள் பெயர், முகவரி, ஃபோன் எண், மின்னஞ்சல் முகவரி, கட்டணத் தகவல் போன்ற விஷயங்களை நாங்கள் சேமிப்பதால், உங்களுக்காக இந்தப் படிவங்கள் தானாகவே நிரப்பப்படும். நீங்கள் குறிப்பிட்ட தன்னிரப்பிப் புலங்களைத் திருத்தலாம் அல்லது இந்த அமைப்பை முழுவதுமாக முடக்கலாம்.

சுயவிவரப் படம் மற்றும் தனிப்பட்ட முடிவுகள் பொத்தானைக் கொண்ட Google தேடல் பட்டி

உங்கள் சொந்தத் தகவலைக் கண்டறிவதற்கு Google தேடல் உதவும் விதம்

Gmail, Google Photos, கேலெண்டர் மற்றும் பலவற்றில் இருந்து பயனுள்ள தகவல்களை Google தேடல் எடுப்பதுடன், நீங்கள் அதிகமாகத் தேட வேண்டிய அவசியமில்லாமல் உங்கள் தனிப்பட்ட தேடல் முடிவுகளில் அவற்றைக் காட்டும். “எனது பல் மருத்துவர் சந்திப்பு,” “நான் கடற்கரையில் எடுத்த படங்கள்,” அல்லது “எனது ஹோட்டல் முன்பதிவு” போன்ற தகவல்களைத் தேடினால் போதும். நீங்கள் உள்நுழைந்திருக்கும் வரை, இந்தத் தகவலைப் பிற Google சேவைகளிடமிருந்து பெற்று, அவற்றை எளிதில் உங்களுக்கு வழங்குவோம்.

பயனர் மற்றும் Google அசிஸ்டண்ட் இடையேயான அரட்டைக் குமிழ்கள்

உங்கள் பணிகளைச் செய்து முடிக்க Google அசிஸ்டண்ட் உங்களுக்கு எவ்வாறு உதவும்

நீங்கள் வீட்டில் இருந்தாலும் சரி அல்லது பயணத்தில் இருந்தாலும் சரி, உங்கள் அசிஸ்டண்ட் எப்போதும் உதவுவதற்குத் தயாராக இருக்கும். அசிஸ்டண்ட்டிடம் கேள்வி கேட்டாலோ அல்லது அது என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறினாலோ, உங்களுக்கு வேண்டியதை வழங்குவதற்காகப் பிற Google சேவைகளிலிருந்து தரவைப் பயன்படுத்தும். எடுத்துக்காட்டாக, “அருகில் எந்தெந்த காஃபி கடைகள் உள்ளன?” அல்லது “நாளை நான் குடை வைத்திருக்க வேண்டுமா?” எனக் கேட்டால், உங்களுக்கு மிகவும் தொடர்புடைய தகவலை வழங்குவதற்காக இருப்பிடம், ஆர்வங்கள், விருப்பத்தேர்வுகள் ஆகியவை உட்பட வரைபடம் மற்றும் தேடலிலிருந்து தகவலை அசிஸ்டண்ட் பயன்படுத்தும். எனது செயல்பாடு கருவிக்குச் சென்று, உங்கள் அசிஸ்டண்டுடன் உரையாடியதிலிருந்து சேகரித்த தரவை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் அல்லது நீக்கலாம்.

எனது கணக்கைக் காட்டும் உலாவி

எனது கணக்கு என்பதில் உங்கள் தனியுரிமை அமைப்புகளைக் கட்டுப்படுத்தலாம்

உங்களிடம் Google கணக்கு இருந்தாலும் இல்லை என்றாலும், சிறந்த Google சேவைகளை வழங்க எந்த வகையான தரவைப் பயன்படுத்தலாம் என்பதைத் தீர்மானிக்கலாம். உங்கள் தனிப்பட்ட தகவலை நிர்வகித்து, உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கு உதவும் கருவிகளுக்கான விரைவான அணுகலை எனது கணக்கு வழங்குகிறது.

Chrome சாளரத்தில் உள்ள முந்தைய தேடல்கள்

"எனது கணக்கு" என்பதில் உங்கள் கணக்கில் என்ன தரவு உள்ளது என்பதைப் பார்க்கலாம்

எனது செயல்பாடு என்பது எங்கள் சேவைகளைப் பயன்படுத்தி நீங்கள் தேடிய, பார்த்த, கண்டுகளித்த அனைத்தையும் காட்டும் மைய இடமாகும். உங்கள் முந்தைய ஆன்லைன் செயல்பாட்டை எளிதாக மீண்டும் பார்ப்பதற்காக, தலைப்பு, தேதி மற்றும் தயாரிப்பு ஆகியவற்றின்படி தேடக்கூடிய கருவிகளை வழங்குகிறோம். உங்கள் கணக்குடன் தொடர்புப்படுத்தப்பட விரும்பாத குறிப்பிட்ட செயல்பாடுகளை அல்லது தலைப்புகள் முழுவதையும் கூட நீங்கள் நிரந்தரமாக நீக்கலாம்.

Chrome மறைநிலை ஐகான்

மறைநிலைப் பயன்முறை மூலம் இணையத்தில் தனிப்பட்ட முறையில் உலாவலாம்

மிகவும் பயனுள்ள தேடல் முடிவுகளை உங்களுக்கு வழங்க, இணைய வரலாறு உதவினாலும், சில நேரங்களில் நீங்கள் தனிப்பட்ட முறையில் உலாவ விரும்பலாம். எடுத்துக்காட்டாக, உங்களுக்குப் பிடித்தவருடன் கணினியைப் பகிர்ந்து பயன்படுத்துகிறீர்கள் எனில், ஆச்சரியமூட்டும் வகையில் அவருக்குப் பிறந்தநாள் பரிசை வழங்குவதற்காக நீங்கள் தேடிய உலாவல் வரலாற்றை அவரிடமிருந்து மறைக்க விரும்பலாம். இது போன்ற தருணங்களில், உங்கள் உலாவல் வரலாற்றை Google Chrome சேமிப்பதைத் தடுக்க, கணினி அல்லது மொபைல் சாதனத்தில் மறைநிலை சாளரத்தைப் பயன்படுத்தவும்.