கட்டுப்பாட்டைப் பெறலாம்

உங்களிடம் தனியுரிமையை நிர்வகிப்பதற்கான கட்டுப்பாடுகள் உள்ளன.

முடிந்தவரை எங்கள் சேவைகளைப் பயனுள்ளதாக்க நாங்கள் தரவைப் பயன்படுத்துவோம், ஆனால் எந்த வகையான தரவைச் சேகரித்து, பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவுசெய்வீர்கள். உங்கள் தனியுரிமையையும் பாதுகாப்பையும் நிர்வகிக்க உதவுகின்ற, பயன்படுத்த எளிதான கருவிகளை நீங்கள் விரைவாக அணுகுவதற்கு உதவியாக "எனது கணக்கு" என்பதை உருவாக்கியுள்ளோம். பின்வரும் அமைப்புகளைக் கவனமாகப் பார்த்து, தெரிந்துகொள்வதன் மூலம் உங்கள் தரவானது Google சேவைகளை எப்படி உங்களுக்கு ஏற்றதாகப் பயன்படுத்த உதவுகிறது என்பதை நீங்கள் முடிவுசெய்யலாம்.

"எனது கணக்கு" என்பதற்குச் செல்லவும்

தனியுரிமை சரிபார்ப்பின் மூலம் உங்கள் தனியுரிமை அமைப்புகளை நிர்வகிக்கலாம்

ஒரு சில நிமிடங்களிலேயே, Google சேகரிக்கும் தரவு வகைகளை நிர்வகிக்கலாம், நண்பர்களுடன் அல்லது பொதுவில் எந்த விதமான தனிப்பட்ட தகவலைப் பகிர்கிறீகள் என்பதைப் பற்றித் தெரிவிக்கலாம், மேலும் எந்த விதமான விளம்பரங்களை Google உங்களுக்குக் காட்ட வேண்டும் என்பதை மாற்றலாம். விரும்பும்போதெல்லாம் இந்த அமைப்புகளை மாற்றிக்கொள்ளலாம்.

தனியுரிமை சரிபார்ப்பை மேற்கொள்ளவும்

பாதுகாப்புச் சரிபார்ப்பின் மூலம் உங்கள் கணக்கைப் பாதுகாக்கலாம்

Google கணக்கைப் பாதுகாக்க நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் பாதுகாப்புச் சரிபார்ப்பை மேற்கொள்வதாகும். உங்கள் மீட்புத் தகவல் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பதையும், உங்கள் கணக்குடன் இணைக்கப்பட்ட இணையதளங்கள், பயன்பாடுகள், சாதனங்கள் ஆகியவை இன்னும் நீங்கள் பயன்படுத்துபவைதான் மற்றும் அவை நம்பகமானவைதான் என்பதையும் சரிபார்ப்பதற்கு உதவுவதற்காக இதை வடிவமைத்துள்ளோம். ஏதேனும் சந்தேகத்திற்குரியதாக இருந்தால், உங்கள் அமைப்புகள் அல்லது கடவுச்சொல்லை உடனடியாக மாற்றலாம். பாதுகாப்புச் சரிபார்ப்பு ஒரு சில நிமிடங்களிலேயே முடிந்துவிடும், மேலும் விரும்பும்போதெல்லாம் இதைச் செய்யலாம்.

பாதுகாப்புச் சரிபார்ப்பை மேற்கொள்ளவும்

உங்கள் கணக்குடன் எந்தத் தரவு தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்பதை முடிவுசெய்யலாம்

வரைபடத்தில் சிறந்த பயண முறையைப் பெறுவது முதல் தேடலில் விரைவான முடிவுகளைப் பெறுவது வரை, உங்கள் கணக்கிலிருந்து நாங்கள் சேகரிக்கும் தரவின் மூலம் Google சேவைகளை உங்களுக்கு மேலும் பயனுள்ளதாக்கலாம். செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி, உங்கள் கணக்குடன் எவை தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்பதை முடிவுசெய்யலாம், தேடல்கள், உலாவல் செயல்பாடு, நீங்கள் செல்லும் இடங்கள், உங்கள் சாதனங்களிலிருந்து பெறும் தகவல் போன்ற குறிப்பிட்ட வகையான தரவுச் சேகரிப்பை இடைநிறுத்தலாம்.

செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளுக்குச் செல்லவும்

உங்கள் முன்னுரிமைகளின் அடிப்படையில் விளம்பரங்களைக் கட்டுப்படுத்தலாம்

உங்கள் விளம்பர அமைப்புகளில், உங்களுக்கு ஆர்வமுள்ள தலைப்புகளின் அடிப்படையில் விளம்பரங்களைக் கட்டுப்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, உங்களுக்கு பாப் இசை பிடிக்கும் என்பதை Googleக்குத் தெரிவிக்க, விளம்பர தனிப்பயனாக்க அமைப்புகளைப் பயன்படுத்தினால், YouTube இல் உள்நுழைந்திருக்கும் போது உங்கள் அருகிலுள்ள வரவிருக்கும் வெளியீடுகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கான விளம்பரங்களை நீங்கள் பார்க்கக்கூடும்.

உள்நுழைந்திருக்கும் போது விளம்பரத் தனிப்பயனாக்கத்தை முடக்கினால், Google சேவைகள் மட்டுமல்லாமல் எங்களுடன் கூட்டாளராக உள்ள இணையதளங்கள், பயன்பாடுகளில் காட்டப்படும் உங்கள் ஆர்வங்களுடன் தொடர்புடைய விளம்பரங்களை நிறுத்துவோம். உள்நுழையாத போது விளம்பரத் தனிப்பயனாக்கத்தை முடக்கினால் Google சேவைகளில் மட்டும் விளம்பரங்கள் காட்டப்படாது.

விளம்பர அமைப்புகளுக்குச் செல்லவும்

"எனது கணக்கு" என்பதில் உங்கள் கணக்கில் என்ன தரவு உள்ளது என்பதைப் பார்க்கலாம்

எனது செயல்பாடு என்பது எங்கள் சேவைகள் மூலம் நீங்கள் தேடிய, பார்த்த, கண்டுகளித்த விஷயங்களைக் காட்டும் மைய இடமாகும். உங்கள் முந்தைய ஆன்லைன் செயல்பாட்டை எளிதாக மீண்டும் பார்ப்பதற்காக தலைப்பு, தேதி மற்றும் தயாரிப்பு ஆகியவற்றின்படி தேடும் கருவிகளை அளிக்கிறோம். உங்கள் கணக்குடன் தொடர்புப்படுத்தப்பட விரும்பாத குறிப்பிட்ட செயல்பாடுகள் அல்லது தலைப்புகள் முழுவதையும் கூட நிரந்தரமாக நீக்கிக் கொள்ளலாம்.

"எனது செயல்பாடு" என்பதற்குச் செல்லவும்

உங்கள் அடிப்படை கணக்குத் தகவலைச் சரிபார்க்கலாம்

Google சேவைகளில் நீங்கள் பகிரும் தனிப்பட்ட தகவலைக் (பெயர், மின்னஞ்சல் முகவரி, ஃபோன் எண் போன்றவை) கட்டுப்படுத்தலாம்.

தனிப்பட்ட தகவலைச் சரிபார்க்கலாம்

"உங்கள் தரவைப் பதிவிறக்கவும்" என்பதன் மூலம் உங்கள் உள்ளடக்கத்தை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச்செல்லலாம்

உங்கள் படங்கள். உங்கள் மின்னஞ்சல்கள். உங்கள் தொடர்புகள். உங்கள் புத்தகக்குறிகளும். உங்கள் Google கணக்கில் சேமித்த உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். அதற்காகவே உங்கள் தரவைப் பதிவிறக்கவும் என்ற அம்சத்தை உருவாக்கியுள்ளோம். அதனைப் பயன்படுத்தி உங்கள் தரவை நகலெடுக்கலாம், காப்புப் பிரதி எடுக்கலாம் அல்லது மற்ற சேவைக்கு நகர்த்தலாம்.

"உங்கள் தரவைப் பதிவிறக்கவும்" என்பதற்குச் செல்லவும்