பாதுகாப்பான இணையம்

அனைவருக்கும் பாதுகாப்பான இணையத்தை உருவாக்க உதவுகிறோம்.

எங்கள் பயனர்களுக்கு மட்டுமின்றி, ஆன்லைன் உலகம் முழுவதற்கும் பலன்களை வழங்கும் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் நீண்டகாலமாக ஈடுபட்டுவந்துள்ளோம். எங்கள் சேவைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க தொழில்நுட்பத்தை உருவாக்கும் போது, எல்லோருடைய நன்மைக்காகவும் அதைப் பகிர்வதற்கான வாய்ப்புகளைக் கண்டறிகிறோம். மேலும் அச்சுறுத்தல்கள் காலத்திற்கேற்ப மாறும் போது, மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய, எங்களுடைய தொலைநோக்குள்ள நடவடிக்கைகள் பிற நிறுவனங்களும் பின்பற்ற வேண்டிய வழியை உருவாக்குகின்றன.

Chrome பயனர்களை மட்டுமல்லாது பிறரையும் பாதுகாப்பான உலாவல் பாதுகாக்கிறது

முதலில், Chrome பயனர்கள் அபாயகரமான தளங்களுக்குச் செல்லும் போது, எச்சரிப்பதன் மூலம் தீப்பொருள் மற்றும் ஃபிஷிங் தாக்குதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காகவே எங்கள் பாதுகாப்பான உலாவல் தொழில்நுட்பத்தை உருவாக்கினோம். ஒவ்வொருவருக்கும் இணையம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய, Apple Safari, Mozilla Firefox உள்ளிட்ட பிற நிறுவனங்களின் உலாவிகள் பயன்படுத்துவதற்காக இந்தத் தொழில்நுட்பத்தை இலவசமாக வழங்கினோம். இன்று ஆன்லைனில் உள்ளவர்களில் பாதி பேரை பாதுகாப்பான உலாவல் பாதுகாக்கிறது.

தளங்களில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்தால், தள உரிமையாளர்களை எச்சரிக்கிறோம் மற்றும் சிக்கல்களை விரைவாகத் தீர்ப்பதற்காக அவர்களுக்கு உதவ இலவசக் கருவிகளையும் வழங்குகிறோம். நாங்கள் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் போதெல்லாம் அதை மற்றவர்களுக்கும் பகிர்வதன் மூலம், ஒவ்வொருவருக்கும் இணையம் பாதுகாப்பாக இருக்க உதவுகிறோம்.

இணையத்தில் உலாவும் போது, உங்கள் பாதுகாப்பிற்காக HTTPSஐப் பயன்படுத்துகிறோம்

HTTPS முறைமையாக்கத்தின் வழியாக எங்கள் சேவைகளுடன் இணைப்பதால், நீங்கள் உண்மையில் அணுக வேண்டியதை மட்டுமே அணுகுவதை உறுதி செய்வதற்காக, உங்கள் தகவலை அனுமதியின்றிப் பெற நினைப்பவர்கள் மற்றும் தீங்குவிளைவிக்கும் ஹேக்கர்களிடமிருந்து பாதுகாக்கப்படுகிறீர்கள். இணையதளங்கள் இந்தக் கூடுதல் பாதுகாப்பைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக, எங்கள் தேடல் முடிவுகளில் இணையதளங்களைத் தரவரிசையிடும் போது Google தேடல் அல்காரிதம் பயன்படுத்தும் சிக்னல்களில் ஒன்றாக HTTPS முறைமையாக்கத்தை அமைத்துள்ளோம்.

பாதுகாப்பின்மையை வெளியிடுபவர்களுக்காகப் பாதுகாப்பு வெகுமதிகளை உருவாக்கியுள்ளோம்

எங்கள் சேவைகளில் பாதுகாப்பின்மைகளைக் கண்டறிவதிலும் பாதுகாப்புத் தீர்வுகளை உருவாக்குவதிலும் ஈடுபடும் தனிப்பட்ட ஆராய்ச்சியாளர்களுக்கு வெகுமதிகளை வழங்குவதற்காகப் பாதுகாப்பு வெகுமதித் திட்டங்களை Google இல் உருவாக்கியுள்ளோம். ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான டாலர்களை ஆராய்ச்சி உதவித் தொகையாகவும் பிழை கண்டுபிடிப்பாளர் நிதியாகவும் வழங்குகிறோம். தற்போது Chrome, Android போன்று, பல Google தயாரிப்புகளுக்காகப் பாதுகாப்பு வெகுமதித் திட்டங்களைப் பயன்படுத்துகின்றோம்.

டெவெலப்பர்களுக்கு எங்கள் பாதுகாப்புக் கருவிகள் கிடைக்கும்படி செய்துள்ளோம்

பிறருக்கு எங்கள் பாதுகாப்புத் தொழில்நுட்பம் மதிப்பு வாய்ந்ததாக இருக்கும் என நம்பும் போது, அதைப் பகிர்ந்துகொள்கிறோம். எடுத்துக்காட்டாக, App Engine இல் இணையப் பயன்பாடுகளை டெவெலப்பர்கள் ஸ்கேன் செய்து, பாதுகாப்புக் குறைபாடுகளை ஆய்வுசெய்வதற்காக, அவர்களுக்கு எங்கள் Google மேகக்கணிப் பாதுகாப்பு ஸ்கேனரை இலவசமாகப் பயன்படுத்த அனுமதித்துள்ளோம்.

பாதுகாப்பான இணையத்தை உருவாக்குவதற்காக, எங்கள் நடைமுறைகள் பற்றிய தரவைப் பகிர்கிறோம்

2010 ஆம் ஆண்டு முதல், பதிப்புரிமை அகற்றங்கள், பயனர் தரவிற்கான அரசாங்கக் கோரிக்கைகள், பாதுகாப்பான உலாவல் போன்ற பாதுகாப்பு முன்முயற்சிகள் போன்ற விஷயங்களின் புள்ளிவிவரங்களை வழங்கும் வெளிப்படைத்தன்மை அறிக்கையை Google வெளியிட்டுள்ளது. இணையதளங்கள், மின்னஞ்சலுக்காக முறைமையாக்கத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்களின் தரவையும் பகிர்கிறோம். எங்கள் பயனர்களிடம் செயல்பாடுகளைப் பகிர்வதற்காக மட்டுமின்றி, ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பான இணையம் கிடைப்பதற்காக, மிகவும் வலிமையான பாதுகாப்புத் தரநிலைகளைப் பிறரும் பின்பற்றுவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காகவும் இதைச் செய்கிறோம்.