விளம்பரங்கள் இயங்கும் விதம்

உங்கள் தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் விற்பனை செய்வதில்லை.

Google சேவைகள், இணையதளங்கள் மற்றும் எங்களுடன் கூட்டாளராக உள்ள மொபைல் பயன்பாடுகள் ஆகியவற்றில் விளம்பரங்களைக் காட்டுவதன் மூலமே பெரும்பாலும் எங்கள் வணிகம் நடைபெறுகிறது. அனைவருக்கும் இலவசமாக எங்கள் சேவைகளை வழங்க, விளம்பரங்கள் உதவுகின்றன. இந்த விளம்பரங்களைக் காட்டுவதற்காக, தரவைப் பயன்படுத்துவோம். ஆனால் உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, கட்டணத் தகவல்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை விற்பனை செய்வதில்லை.

தொடர்புடைய விளம்பரங்களை வழங்க, தரவைப் பயன்படுத்துவோம்

உங்கள் தேடல்கள், இருப்பிடம், நீங்கள் பயன்படுத்திய இணையதளங்கள் மற்றும் பயன்பாடுகள், நீங்கள் பார்த்த வீடியோக்கள் மற்றும் விளம்பரங்கள், உங்கள் வயது வரம்பு, பாலினம் போன்ற நீங்கள் வழங்கிய தனிப்பட்ட தகவல்கள் மற்றும் நீங்கள் ஆர்வம் காட்டும் தலைப்புகள் உட்பட உங்கள் சாதனங்கள் மூலம் சேகரித்த தரவைப் பயன்படுத்தி உங்களுக்குப் பயனுள்ள விளம்பரங்களைக் காட்ட முயற்சிப்போம்.

நீங்கள் உள்நுழைந்திருந்தால் உங்கள் விளம்பர அமைப்புகளைப் பொறுத்து, எல்லா சாதனங்களிலும் விளம்பரங்களைக் காட்ட இந்தத் தரவு பயன்படுத்தப்படும். அதனால், பணியிடத்தில் உள்ள கணினியைப் பயன்படுத்தி ஒரு பயணத் திட்டமிடல் இணையதளத்தைப் பார்த்திருந்தால், உங்கள் மொபைலில் இரவில் சென்னைக்கான பேருந்துக் கட்டணங்களைப் பற்றிய விளம்பரங்களைக் காணக்கூடும்.

பயனர்கள் பார்க்கும் அல்லது தட்டும் விளம்பரங்களுக்காக மட்டுமே விளம்பரதாரர்கள் பணம் செலுத்துவார்கள்

எங்களுடன் இணைந்து விளம்பரதாரர்கள் விளம்பரங்களைக் காட்டும் போது, உங்கள் தனிப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அல்லாமல் அந்த விளம்பரங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதைப் பொறுத்து பணம் செலுத்துவார்கள். அதாவது, விளம்பரத்தை யாரோ ஒருவர் பார்க்கும் அல்லது தட்டும் ஒவ்வொரு முறையும், அல்லது பயன்பாட்டைப் பதிவிறக்குதல், கோரிக்கைப் படிவத்தை நிரப்புதல் போன்ற செயல்பாடுகளை விளம்பரத்தைப் பார்த்து, அதிலிருந்து செய்யும் போதும் மட்டுமே பணம் செலுத்துவார்கள்.

விளம்பரதாரர்களின் விளம்பரங்களின் செயல்திறனைப் பற்றிய விவரங்களை அவர்களுக்கு வழங்குவோம்

விளம்பரதாரர்களின் விளம்பரங்களின் செயல்திறனைப் பற்றிய விவரங்களை அவர்களுக்கு வழங்கினாலும் கூட, அவற்றில் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் எவற்றையும் சேர்க்க மாட்டோம். உங்களுக்கு விளம்பரங்களைக் காட்டும் செயல்முறையின் ஒவ்வொரு படியிலும், உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பாகவும் தனிப்பட்ட முறையிலும் வைத்திருப்போம்.

Google சேவைகள் மற்றும் கூட்டாளர் தளங்களில் விளம்பரங்கள் காட்டப்படும் விதம்

Google சேவைகள் அல்லது எங்களுடன் கூட்டாளராக உள்ள இணையதளங்கள் மற்றும் மொபைல் பயன்பாடுகளில் உங்களுக்குப் பயனுள்ள விளம்பரங்களைக் காட்ட, தரவைப் பயன்படுத்துகின்றோம்.

உலாவியின் சாளரத்தில் உள்ள பலவண்ண சைக்கிள்கள்

தேடலில் விளம்பரங்கள் காட்டப்படும் விதம்

நீங்கள் Google தேடலைப் பயன்படுத்தும் போது, தொடர்புடைய தேடல் முடிவுகளின் அருகில் அல்லது அவற்றின் மேலாக விளம்பரங்கள் காட்டப்படலாம். பெரும்பாலும், இந்த விளம்பரங்கள் நீங்கள் தேடிய சொல் மற்றும் உங்கள் இருப்பிடத்தின் அடிப்படையில் இருக்கும். எடுத்துக்காட்டாக, “சைக்கிளிங்” என தேடுகிறீர்கள் எனில், உங்களுக்கு அருகில் விற்பனைக்கு உள்ள பைசைக்கிள்களைப் பற்றிய விளம்பரங்களைக் காணலாம்.

சில நேரங்களில், இன்னும் பயனுள்ள விளம்பரங்களைக் காட்டுவதற்காக, உங்களின் முந்தைய தேடல்கள் அல்லது நீங்கள் பார்த்த தளங்கள் போன்ற கூடுதல் தரவைப் பயன்படுத்துவோம். ஏற்கனவே “சைக்கிளிங்” என்பதைத் தேடிவிட்டு, இப்போது “விடுமுறை” என்பதைத் தேடுகிறீர்கள் எனில், விடுமுறையில் சைக்கிளிங் செல்வதற்கான இடங்களைப் பற்றிய தேடல் விளம்பரங்களைக் காணலாம்.

Gmail இல் மஞ்சள் வண்ணத்தில் காட்டப்படும் Google Ads

YouTube இல் விளம்பரங்கள் காட்டப்படும் விதம்

YouTube இல் வீடியோக்களைப் பார்க்கும் போது, வீடியோ இயங்குவதற்கு முன்பாக அல்லது வீடியோ பக்கத்தில் விளம்பரங்களைக் காணலாம். இந்த விளம்பரங்கள், நீங்கள் பார்த்த வீடியோக்களின் அடிப்படையிலும், நீங்கள் YouTube இல் செய்துள்ள தற்போதைய மற்றும் சமீபத்திய தேடல்களின் அடிப்படையிலும் இருக்கலாம்.

எடுத்துக்காட்டாக, “ஃபேஷன் குறிப்புகள்” என்பதைத் தேடுகிறீர்கள் அல்லது அழகுக் குறிப்புகள் தொடர்பான வீடியோக்களைப் பார்க்கிறீர்கள் எனில், புதிய அழகுக் குறிப்புத் தொடர்களைப் பற்றிய விளம்பரங்களைக் காண்பீர்கள். இந்த விளம்பரங்கள், நீங்கள் பார்க்கும் வீடியோக்களின் தயாரிப்பாளர்களை ஆதரிக்க உதவலாம்.

பார்க்க விருப்பமில்லையெனில், பல YouTube விளம்பரங்களைத் தவிர்க்கலாம்.

YouTube வீடியோ பார்க்கும் போதே பாப் அப் விளம்பரத்தில் அழகான குளிர்கண்ணாடிகள்

Gmail இல் விளம்பரங்கள் காட்டப்படும் விதம்

உங்கள் Google கணக்குடன் தொடர்புடைய தரவின் அடிப்படையிலேயே, Gmail இல் விளம்பரங்களைப் பார்க்கிறீர்கள். எடுத்துக்காட்டாக, YouTube அல்லது தேடல் போன்ற பிற Google சேவைகளில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாட்டிற்கு ஏற்ப Gmail இல் நீங்கள் பார்க்கும் விளம்பரங்களின் வகைகள் மாறலாம். விளம்பரங்களை உங்களுக்குக் காட்டுவதற்காக, உங்கள் இன்பாக்ஸில் உள்ள முக்கியச் சொற்களையோ அல்லது செய்திகளையோ Google பயன்படுத்துவதில்லை. விளம்பரங்களை உங்களுக்குக் காட்டுவதற்காக, எவரும் உங்கள் மின்னஞ்சலைப் படிக்க மாட்டார்கள்.

ஸ்டைலான பச்சை பை விளம்பரத்துடன் உள்ள சுயவிவரப் படத்தைக் கொண்ட உலாவி

Google கூட்டாளர் தளங்களில் விளம்பரங்கள் காட்டப்படும் விதம்

விளம்பரங்களைக் காட்டுவதற்காக பல இணையதளங்களும் மொபைல் பயன்பாடுகளும் எங்களுடன் கூட்டாளராக இணைந்துள்ளன. எங்கள் பயனர்கள் பகிர்ந்துகொண்ட தனிப்பட்ட தகவல்கள் மற்றும் உங்கள் ஆன்லைன் செயல்பாடுகளில் இருந்து சேகரித்த தரவு ஆகியவற்றின் அடிப்படையிலான பார்வையாளர் “வகைகளுக்கு” குறிப்பிட்ட விளம்பரங்களை இந்த விளம்பரதாரர்கள் காட்டக்கூடும்: எடுத்துக்காட்டாக, “பயணம் செய்வதில் விருப்பம் கொண்ட 25 – 34 வயதிற்குட்பட்ட ஆண்கள்.”

நீங்கள் முன்பு பார்த்த தளங்களின் அடிப்படையிலும் விளம்பரங்களை நாங்கள் காட்டக்கூடும் — எடுத்துக்காட்டாக, உங்கள் ஆன்லைன் ஷாப்பிங் கார்ட்டில் சேர்த்துவிட்டு வாங்காமல் விட்ட சிவப்பு வண்ணக் காலணியைப் பற்றிய விளம்பரங்களைப் பார்க்கக்கூடும். உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி அல்லது பில்லிங் தகவல்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை வெளியிடாமேலேயே இதனைச் செய்கின்றோம்.

உங்கள் Google விளம்பர அனுபவத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம்

நீங்கள் உள்நுழைந்திருந்தாலும் இல்லாவிட்டாலும், எந்த வகையாக விளம்பரங்களைப் பார்க்க வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்தும் கருவிகளை அளிக்கின்றோம்.

விளம்பர அமைப்புகள் மற்றும் குளிர்கண்ணாடி விளம்பரத்துடன் டேப்லெட்

உங்கள் முன்னுரிமைகளின் அடிப்படையில் விளம்பரங்களைக் கட்டுப்படுத்தலாம்

உங்கள் விளம்பர அமைப்புகளில், உங்களுக்கு ஆர்வமான எந்தத் தலைப்புகளின் அடிப்படையில் விளம்பரங்கள் காட்டப்பட வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யலாம். எடுத்துக்காட்டாக, உங்களுக்குப் பாப் இசை பிடிக்கும் என்பதை Googleக்குத் தெரிவிக்க, விளம்பரத் தனிப்பயனாக்க அமைப்புகளைப் பயன்படுத்தினால், YouTube இல் உள்நுழைந்திருக்கும் போது உங்கள் அருகில் நடைபெறும் வரவிருக்கும் வெளியீடுகள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கான விளம்பரங்களை நீங்கள் பார்க்கக்கூடும்.

உள்நுழைந்திருக்கும் போது விளம்பரத் தனிப்பயனாக்கத்தை முடக்கினால், Google சேவைகள் மட்டுமல்லாமல் எங்களுடன் கூட்டாளராக உள்ள இணையதளங்கள், பயன்பாடுகளில் காட்டப்படும் உங்கள் ஆர்வங்களுடன் தொடர்புடைய விளம்பரங்களை நிறுத்துவோம். உள்நுழையாத போது விளம்பரத் தனிப்பயனாக்கத்தை முடக்கினால் Google சேவைகளில் மட்டும் விளம்பரங்கள் காட்டப்படாது.

மேலே விளம்பரத்தை முடக்கும் பொத்தானுடன் பச்சை வண்ண காரைக் காட்டும் Google விளம்பரம்

நீங்கள் பார்க்க விரும்பாத விளம்பரங்களை அகற்றலாம்

எங்கள் கூட்டாளராக உள்ள இணையதளங்கள் மற்றும் பயன்பாடுகளின் வழியாகக் காண்பிக்கும் பல விளம்பரங்களில் ”இந்த விளம்பரத்தை முடக்கு” எனும் வசதியை அளிக்கிறோம். விளம்பரத்தின் மூலையில் உள்ள “X” என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், தொடர்புடையதாக இல்லாத விளம்பரங்களை அகற்றலாம்.

எடுத்துக்காட்டாக, புதிய கார் வாங்குவதாக இருக்கும் போது, கார் விளம்பரங்கள் உதவியாக இருக்கலாம், ஆனால் புதிய காரை வாங்கிய பிறகு, அநேகமாக வாங்கிய கார் தொடர்பாக Google வழங்கும் அதிக விளம்பரங்களைக் காண விரும்பமாட்டீர்கள்.

நீங்கள் உள்நுழைந்திருந்தால், உங்கள் விளம்பர அமைப்புகளின் அடிப்படையில், இந்தக் கட்டுப்பாடானது நீங்கள் உள்நுழைந்துள்ள சாதனங்கள், எங்களுடன் கூட்டாளராக உள்ள இணையதளங்கள் மற்றும் பயன்பாடுகள் என அனைத்திலும் பயன்படுத்தப்படும்.

விளம்பரங்களைக் காட்டும் Google சேவைகளில் "இந்த விளம்பரதாரரைத் தடு" என்பதைப் பயன்படுத்தி, உள்நுழையாத நிலையிலும் விளம்பரங்களைத் தடைசெய்யலாம்.

மேலே வலதுபுறத்தில் தகவல் பொத்தானுடன் கூடிய குளிர்கண்ணாடி விளம்பரம்

உங்களுக்கு விளம்பரங்களைக் காட்டுவதற்காக என்ன வகையான தரவைப் பயன்படுத்துகிறோம் என்பதை அறியவும்

விளம்பரங்களைக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் தரவைப் பற்றி நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு உதவ விரும்புகிறோம். தோன்றும் அறிவிப்பில் கிளிக் செய்ய அனுமதிக்கும் ”இந்த விளம்பரம் ஏன் காட்டப்படுகிறது” என்ற அம்சம் கொடுக்கப்பட்ட விளம்பரம் ஏன் உங்களுக்குக் காட்டப்படுகிறது என்பதை அறிய உதவுகிறது. எடுத்துக்காட்டாக, ஃபேஷன் இணையதளங்களைப் பார்வையிட்டதன் காரணமாக நீங்கள் ஆடை விளம்பரத்தைப் பார்க்கக்கூடும். அல்லது உணவகத்தின் விளம்பரத்தைத் பார்த்தால், அது உங்கள் பகுதியில் இருப்பதன் காரணமாக இருக்கலாம். இந்த வகையான தரவு, பயனர்களுக்குப் பயனளிக்கும் விஷயங்களைப் பற்றிய விளம்பரங்களைக் காட்ட உதவுகிறது. இந்தத் தரவை ஒருபோதும் விளம்பரதாரர்களுடன் பகிர்வதில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.